தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சாதித்த பகுத்தறிவாளர்
அறிவாளிகள்
பக்தியா? பகுத்தறிவா?
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்
அய்யப்பன் கதை

சிறுகதை

அக்கினியின் ஆசை
மருத்துவம்
புதுப்பாக்கள்
ஆய்வு
அணுஅணுவாய்-11
மாற்றம்
வெற்றி அல்லது வீரமரணம்
அடிமைச்சின்னம்
சுமங்கலி - அமங்கலி
பரதாயணம்
பெட்டிச் செய்திகள்
 
 
 
ஜூலை 1-15 2008
பிரதி எடுக்க நண்பருக்கு அனுப்ப

தலையங்கம்

சமூகநீதியை உள்ளடக்கிய மகளிர் இட ஒதுக்கீடு தேவை!

திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் இயங்கும் இந்தக் கூட்டணியின் - பிரதமர் மன்மோகன்சிங் அவர்களது அமைச்சரவை, தகவல் அறியும் சட்டம் ( Right to information) மகளிருக்கு, ஆண் பிள்ளைகளுக்குச் சமமான சொத்துரிமைச் சட்டம், மகளிரை வன்கொடுமையிலிருந்து பாது காக்கும் சட்டம், சிறுபான்மையினருக்கு தனி இடங்கள், கல்வி உதவித் தொகை, தனியே சிறுபான்மை யினர் நலத்துறை, எல்லாவற்றிலும் மகுடம் வைத்ததுபோல சமூகநீதிக்கு செயல் வடிவம் தந்திட ஒடுக்கப்பட்ட மக்களான தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் (எஸ்.சி., எஸ்.டி.) ஆகியோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள், இட ஒதுக்கீடுகள், முதன்முறையாக கடந்த 57 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான மத்தியக் கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இவைகளை மிகப்பெரிய நீதித்துறை, நிர்வாகத் துறையினரிடமிருந்து எதிர்நீச்சல் போட்டு தாண்டி செயல்படுத்த மத்திய கல்வி நிறுவனங்களின் கதவுகள் திறக்கப்படும் ஒரு சாதனை - இப்படிப் பலப்பல!
மத்திய அமைச்சரவை பிரதமர் தலைமையில் கூடி, இதுவரை மத்திய அரசுப் பணிகளில் நிரப்பப்படாத சுமார் 29 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது உள்ளபடியே இவ்வாட்சிக்கு சமூகநீதியில் உள்ள மிகப்பெரிய அக்கறையைப் பறைசாற்றுவதாக உள்ளது!
இந்தியாவின் மூத்த அரசியல் ஞானியும், சமூகநீதியை வென்றெடுப்பதே தமது வாழ்வின் லட்சியம் என்ற தந்தை பெரியாரின் குருகுல மாணவரும், தமிழக முதல்வருமான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களது வழிகாட்டுதல் காரணமாக இத்தகைய முடிவுகள் காய்த்ததோடு, கனிந்து, பழங்களாகி, பசிக்கு உண்ணும் வாய்ப்பையும் மத்திய அரசு அளித்துள்ளது!
இதற்குமுன் Carry forward என்ற பழைய பாக்கி இடங்களை (27 சதவிகித இடங்களை நிரப்பாததால் ஏற்பட்ட காலி இடங்களை) மொத்தமாகச் சேர்த்து 29 ஆயிரமாகக் குவிந்துள்ள நிலையில், அதனை இப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும், மலைவாழ் மக்களுக்கும் எப்படி பாக்கியை நிரப்புகின்றனரோ அதுபோலவே நிரப்பிட முடிவு எடுத்துள்ளது உள்ளபடியே மிகவும் பாராட்டத்தக்க முடிவு ஆகும்!
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசான மத்திய அரசின் மகுடத்தில் சமூகநீதி ஒளி வீசும் ஓர் வைரக்கல் இது ஆகும்!
இதில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், பொதுவான விதியாகிய இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்குமேல் போகக்-கூடாது என்ற விதி இந்த முடிவுக்குப் பொருந்தாது. இது பழைய காலி இடங்களை (Backlog Vacancies) நிரப்பும் சமூகநீதிக்கான முடிவு என்பதை மத்திய அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது - உள்ளபடியே மிகவும் தெளி வானது; துணிவானது; முற்றிலும் நியாயமானது!
அரசியல் சட்டத்தின் 81 ஆவது சட்டத் திருத்தத்தை இதற்கும்விரிவுபடுத்தியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
சமூகநீதியை உள்ளடக்கிய பாலியல் நீதி (Gender Justice Combined with Social Justice) என்பதை மேனாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொணர்ந்த பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் 243(6) ஆவது பிரிவில் உள்ள ஒதுக்கீடுக்கு வழி செய்தபடியே, மகளிருக்கான 33 சத விகித இட ஒதுக்கீட்டிலும் உள் ஒதுக்கீடு செய்து அச்சட்டத்தை வரும் நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றிவிட்டால், இவ்வாட் சிக்கு ஒடுக்கப்பட்ட மக்கள், மகளிர், சிறுபான்மையோர் ஆகியோர் தம் 80 விழுக்காடு ஆதரவு பேராதரவாக கிட்டும் என்பதில் அய்யமில்லை!
விவசாயிகளுக்கு 60, 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி போன்ற மிகப்பெரிய மனிதநேய சாதனைகளும் இவ்வாட்சிக்கு மக்களை நன்றிப் பெருக்கை காட்டச் செய்யும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தி, பண வீக்கத்தினை கட்டுக்குள் அடக்கிடும் பணியிலும் முன்னுரிமையோடு மத்திய ஆட்சி நடந்து கொண்டால், மக்கள் மதவாத சக்திகள் விரிக்கும் மாய வலையில் விழ மாட்டார்கள்.
எனவே, மக்கள் நல அரசு என்பதை இப்படிப்பட்ட பல சாதனை களால் காட்டும் அரசுக்கு வாழ்த்துகள்!

கி.வீரமணி
ஆசிரியர்


பெரியார்
- உண்மை - விடுதலை - The Modern Rationalist - பெரியார் பிஞ்சு - பெரியார் வலைக்காட்சி